மன உறுதி

ஏன் பிறந்தோம் என்று எண்ணும் எண்ணத்தை எரித்து விடு.

பிறந்ததற்கு இனி என்ன செய்ய போறோம் என்று எண்ணி விடு.

இதுவரை செய்த தவறெல்லாம் மறந்து விடு.

இனி வரும் தவறினை குறைத்து விடு.

பிறருக்காக வாழும் எண்ணத்தை குறைத்து விடு.
உனக்காக வாழும் எண்ணத்தை பெருக்கி விடு.

கண்ணீரை கப்பி கட்டி இரைத்து விடு.
மன காயங்களை நம்பிக்கையால் மறைத்து விடு.

இது இருந்தால் தான் வாழ முடியும் என்ற எண்ணத்தை துரத்தி விடு.
எது இல்லை என்றாலும் வாழ முடியும் என்ற எண்ணத்தை கொண்டிடு.

எழுதியவர் : ஜெ ஜெயசூர் (10-Jan-18, 11:33 am)
சேர்த்தது : ஜெ ஜெயசூர்
Tanglish : mana uruthi
பார்வை : 449

மேலே