நம்மை தவிர
நம்மை தவிர !
மற்ற உயிரினங்களுடன்
மில்லியன் ஆண்டுகள்
உடனிருந்து
உயிர் வாழ்ந்தும்
இயற்கையின் வரவுகள்
இதுவரை
புரியவில்லை !
ஆயிரம் அறிவியல்
கருவிகள்
கண்டு பிடிக்க
வந்துவிட்டாலும் !
பனியின் பொழிவுகள்
வெயிலின் தாக்கங்கள்
மழையின் தூறல்கள்
புயலின் வேகங்கள்
சுனாமியின் அழிவுகள்
பூமியின் அதிர்வுகள்
மலைகளின் சரிவுகள்
நம்மை தவிர !