பொங்குது இள மனசு

கரும்பைக் கடிக்கையிலே அவள்
கையெடுத்து கொசுவத்தை
இடுப்பில் சொருகி மடிக்கையிலே
முறமெடுத்து அரிசி கொழிக்கையிலே
கொப்பாய் மரமாய் அசைந்து
விறகெடுத்துப் பானையொடு
குலுங்கி நடக்கையிலே
அடுப்பில் கொள்ளி வைத்து
துளாவ அகப்பை பிடிக்கையிலே
ஏங்கித் தவிக்குது என் வயசு
பொங்கி வரும் பொங்கலாய்
பொங்குது இள மனசு


ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (15-Jan-18, 11:42 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 65

மேலே