மீட்ட இயலா இசை

சந்த நயங்கள் பல சேர்ந்து
ஒய்விலாது பண் ணிசைக்குதடி!
என் சிந்தையிலே அது
வழிந் தோடுதடி!
எதுகையும் மோனையும்
அருவி போல் கொட்டுதடி!
எந்தன் ஐம்பொறிகளிலும்
வீணையாய் அது மீட்டுதடி!
ஆர்கலியின் ஓரத்திலே
ஓயாத அலை போலடிக்குதடி!
எந்தன் காதினிலே அணி அணியாய்
ரீங்கார மிடுதடி!
இந்த கேட்டிராத இன்னிசையை
பதிவு செய்ய நினைத்ததடி!
நினைத்ததுமே என் சிந்தை விட்டு
அது பறந்ததடி!
சில நொடிகள் கடந்தவுடன்
புதியதோர் இசை மலருதடி!
இந்த இடைவிடாத இன்னிசையில்
என் சிந்தையோ துடிக்குதடி!

அந்த துடிப்புகளை உன்னிடம் சேர்த்திட
விளிகள் உன்னைத் தேடுதடி!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (15-Jan-18, 12:10 pm)
Tanglish : meetta iyalaa isai
பார்வை : 86

மேலே