தலைவனின் புலம்பல்

நீ பருத்தி எடுக்கும் அழகு பார்த்து
நான் பருத்தி நாராய் போனேனே
நீ கதிர் அறுக்கும அழகை பார்த்து கதிராகி போனேனே
நீ மஞ்சள் எடுக்கும் அழகு பார்த்து
நான் மஞ்சளாகி போனேனே
நீ கூடை சுமக்கும் அழகு பார்த்து மெய் மறந்து நின்னேனே
என்னவளே அடி என்னவளே
நீ செல்லும் இடமெல்லாம் நிழலாக தானே வந்தேனே
உன்னை பார்க்கும் போதெல்லாம் ஊனுருகி போனேனே
என் ராசாத்தியே
நீ உடுத்தும் கண்டாங்கி சேலையை பார்த்து நெய்யும் நூலாகிப்போனோனே
வானவில்லாய் வளையும் புருங்களின் நடுவிலே வைக்கும் பொட்டுக்கு நான் அடிமையாகிப் போனேனே
அடியேய் அண்ணக்கிளியே
நீ நீண்ட காரிகையை பின்னும் அழகை பார்த்து உன் பின்னாலே வந்தேனே
நீ முத்துமுத்தா சிரிக்கும் அழகை பார்த்து சிலையாக தான் நின்னேனே
அடியேய் உன் வெள்ள மனசை பார்த்து நான் உன்னிடம் மேலும் கரைந்து தான் போனேனே
அடியே என் பாதியே
சொல்லடி உன் விருப்பத்தை

எழுதியவர் : (15-Jan-18, 11:17 am)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 57

மேலே