காதல் நீ

சப்தங்களில்லா தருணமெல்லாம்
முத்தங்கள் சுமக்குமென் முகம்
காரணம் என் கற்பனையில்
நீ..!!
வெட்கை தரும் வெப்பங்களெல்லாம்
சக்கை தள்ளிய கரும்பு மழையாயின
காரணம் என் கற்பனையில்
நீ..!!
கண்ணீர்துளி என் கன்னக்குழியில்
தேங்கிய போதெல்லாம்
காற்றடித்தே காய்ந்து போயின
காரணம் என் கற்பனையில்
நீ..!!
தனிமை தாங்கிய என் நாட்களிலும்
இனிமை தூங்கிய நிமிடங்களுண்டு
காரணம் என் கற்பனையில்
நீ..!!
மனைவியென மாலையிட்ட பின்பும்
கவிதையென ஓலைகட்டி வைப்பேன்
காரணம் என்றுமேயென் காதல்
நீ..!!!!!
செ. மணி