பேருந்துல் ஒர் பேர்விபத்து

நூறு பேர் கொண்ட நெரிசலான ஓர் பேருந்து
ஐந்தாரடி தூரத்தில் உள்ள
இரு இமைமூடா விழிகள் மட்டும் என்னை இடித்தது

உரசலின்றி உஷ்ணம் கூடுது
விரிசலின்றி உள்ளம் உடைந்தது

நிறுத்தம் வருகையில் வயிற்றில் வருத்தம் நிறையுதே
நீ இறங்கவில்லை என்று தெரிந்ததும்
அது இதயம் நுளையுதே

முதல் பார்வையில் முகவரி தருபவளா
இந்த பாதையில் தினசரி வருபவளா

நீ யாரோ
என் மறு தாயாரோ

படி நோக்கி நகர்ந்தது பாதம்
பயனின்றி போனது என் விழி வாதம்

கைக்கூடை கொண்டு தூக்கில்லிட்டால்
பேருந்தை பாடையாக்கிவிட்டால்.

எழுதியவர் : Kumar JYS (18-Jan-18, 1:11 pm)
சேர்த்தது : ஜெய்ஸ் குமார்
பார்வை : 50

மேலே