நினைவுப் பனி

மல்லிகைக் காற்றாய் வந்து வீசி
அவள் தள்ளி விலகிச் சென்றாள் என்
மனதை அள்ளிச் சொருகிச் சென்றாள்
மார்கழிக் குளிரில் அகப்பட்ட கிளியாய்
நான் நடு நடுங்கிப் போகிறேன்
அவள் நினைவுப் பனி அதிகம் பெய்து பெய்து
கம்பளிப் போர்வையாய் அவள் வருவாளா ?
என்னை ஆரத் தழுவி குளிர் அவலம் தீர்ப்பாளா ?
நான் பனியில் உறைந்து போகிறேனே
ஆக்கம்
அஷ்ரப் அலி