காதல் பிரிவு

உன் நினைவுத்தூரல்களால்
இமை மூட மறந்து
இறந்து போன என் இரவுகளை
உன் மௌனத்தின் உணர்வுகள் கொண்டு
கொஞ்சம் உரசிப்பார்.....

நித்தம் நித்தம் நான்
செத்ததையும்
கண்ணீரில் என் இரவுகள்
கரைந்ததையும்
இதயமோ தவணை முறையில்
இறந்ததையும்
கொஞ்சம் கேட்டுப்பார்

இமை எனும் முட்கள் கொண்டு
உன் பிரிவு
என் விழிகளை வருடியதையும்
மெய் சிலிர்க்க கூறுமடி
அந்த நொடியில் உனக்கும்
சற்று புரியும் காதல் பிரிவின் வலி.

எழுதியவர் : (23-Jan-18, 4:23 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : kaadhal pirivu
பார்வை : 2952

மேலே