தாயுமானவன்

சிப்பிக்குள்ளே என்னை
முத்தாய் வளர்த்தாய்,
சிற்பியாகி சித்திரை
நிலவாய் ஒளிரச்செய்தாய்,

அல்லல் என்னை தீண்டாமல்
அல்லும் பகலும் காத்தாய்,
அடுக்களையில் அடைக்காமல்
அஞ்சுகமாய் பறக்கச்செய்தாய்,

கவலையெனும் சிலந்தி வலையில்
சிக்கமால் வாழ்வின் வழிகளை
சீர்மைபடுத்தி தந்தாய்,

அறவழியில் சென்றிட
ஆசனாகி அறிவுரைகள் கொடுத்தாய்,

தோல்வியால் துவண்டால்
தோழனாகி தோள் கொடுத்து நிற்பாய்,

எத்தவம் முற்பிறவில் செய்தேனோ
தாயுமாகி என்னை சுமக்கின்றாய்,

இனி எத்தனை பிறவி எடுத்தாலும்
உன்மகளாக நான் பிறக்கவேண்டும்
இல்லையென்றால் நான்
உனக்கு தாயகா பிறக்கவேண்டும்………………

எழுதியவர் : செ.நா (23-Jan-18, 9:25 pm)
சேர்த்தது : செநா
பார்வை : 1286

மேலே