இரவின் வெளிச்சம்

மறைந்த முன்னோர்களைப்
போலவே
ஒவ்வொறு பொழுதும்
கடந்துகொண்டே இருக்கிறது
கடிகாரத்தை முன்னிருத்தி…
காத்திருக்கும் கனவுகளோடு
இருள் நிறைந்து உருகிய
இரவின் வெளிச்சம்…
கண்ணுக்கு எட்டும்
தூரம் வரை
கருமையின் கதிர்கள்…
நித்திரையின் போது
நிம்மதி தரும்
நிலவின் வெப்பம்…
நினைவில் நிறைந்த
பசியின் கொடுமை
நீண்ட இரவில்
நினைவிருக்காமலேயே
இருந்திருக்கும்…
உலகில்
இரவுகள் மட்டுமே
மிச்சமாய் இருந்தல்
துக்கமெல்லாம்
தூக்கத்திலேயே கழிந்திருக்கும்…

எழுதியவர் : Tamildeva (23-Jan-18, 10:40 pm)
சேர்த்தது : தமிழ் தேவா
Tanglish : iravin velicham
பார்வை : 205

மேலே