குடியரசு 2018
சர்வாதிகார
முடியாட்சிக்கும்
கொடுங்கோல்
மன்னராட்சிக்கும்
முற்றுப்புள்ளி வைத்து
மக்களாட்சியை தொடங்கிய
இனியநாள் குடியரசுதினம்...
தன் நாடு தன் மக்கள்
தன் ஆட்சி என்று
வீரமுழக்கமிட்டு எங்களின்
திருநாட்டை நாங்களே
ஆட்சிசெய்வோம் என்று
சட்டம் இயற்றி ஆங்கிலேய
வர்கத்துக்கு சவுக்கடி கொடுத்த
இனிய நாள் குடியரசுதினம்...
ஒவ்வொரு குடிமகனும்
தனக்கென்று உள்ள வாக்குரிமையை செலுத்தி
தங்களுக்கு பிடித்த
மக்களாட்சியை
தேர்வு செய்வதே குடியரசு
அந்த நாளின் பிறந்த தினமே
குடியரசு தினம்...
ஆங்கிலேய ஆட்சிக்கு
அடிப்பணியாமல்
அவர்களுக்கு எதிராக
அகிம்சை மற்றும் அறவழியில்
போராடி நாட்டுக்காக
நாட்டின் விடுதலைக்காக
தன் இன்னுயிரையும்
தியாகம் செய்த
தியாகிகளுக்கு
குடியரசு தினத்தின்
வீர வணக்கம்...
வந்தே..... மாதரம்...
ஜெய்ஹிந்த்...