மாலையில் தொடங்கும் இரு வெண்பாக்கள்
வருவான் வடிவேலன் !!
*********************************
மாலை மலர்ந்திடும் மல்லிகைப் பூக்களை
மாலையாக்கிச் சூட்டி வழிபட - வேலவனும்
நீலமயில் மீதேறி நெஞ்சம் குளிரவந்து
காலனணு காதுகாப்பான் காண்.
மாலை மயக்கம் !!
**************************
மாலை மயக்கத்தில் மங்கையவள் காத்திருக்கச்
சோலை மலர்மணம் சோர்வகற்ற - சாலை
வழியை விழிகள் மருட்சியுடன் நோக்கப்
பொழிந்த மழையும் பொலிவு.
சியாமளா ராஜசேகர்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
