தங்க சிமிழே
தங்க சிமிழே
தாவணி மயிலே
சங்க தமிழின் சந்தன குயிலே..!
அங்க அழகே
அற்புத கலையே
அகிலம் வியக்கும் அதிசய சிலையே..!
கலைமகள் விழியாய்
கனிவான பார்வை..!
அதில் கரைந்தவர் பலரில்
கவிஞனும் ஒருவன்..!
அலையில்லா கடலாய்
அழகான நெற்றி..!
அதில் சூரிய உதயம்
சிறிய பொட்டு..!
வெண்ணிலவு ஒளியாய்
வெண்மையான முகம்..!
அதில் வெண்புறா சிறகாய்
மென்மையான கன்னம்..!
கறுப்பு வானவில்லாய்
கண் மேல் புருவம்..!
அதில் ஆயுதம் போன்ற
அபாய கூர்மை..!
கட்டெறும்பை கவரும்
கற்கண்டு உதடு..!
அதில் சட்டென்று தெரியும்
சாந்தமான சிரிப்பு..!
நச்சென்று உள்ள
நயகரா கூந்தல்..!
அதில் நாட்டியமாடும்
நாடோடி தென்றல்..!
கவிதையால் நனையும்
கவர்ச்சியான காது..!
அதில் ஆனந்தமாய் தூங்கும்
அதிர்ஷ்டகார தோடு..!
காற்றுக்கு சுவாசம் தரும்
கருணையுள்ள மூக்கு..!
அதில் காதலையும் சுவாசிக்கும்
கடன்கார காற்று..!
பிழையில்லா பிறப்பாய்
பிரபஞ்சத்தில் சிறப்பு..!
இவள் பிரம்மனின் உழைப்பில்
பிரமாண்ட படைப்பு..!
இவள் பிரம்மனின் உழைப்பில்
பிரமாண்ட படைப்பு..!!!