அடியே கருவாச்சி
அடியே கருவாச்சி- உன்
அழகுக்கு நான் சாட்சி..!
விடியும் பூங்காற்றில்
கூவும் குயில் காட்சி..!
நீ பார்க்கும் பார்வையாலே
என் பாதையை மறந்தேனடி..!
உன் பாதத்தின் பின்னாடி
என் பயணத்தை தொடர்ந்தேனடி..!
நீ சிரிக்கும் சிரிப்பென்ன
சிலந்தி வலையாடி..!
சிறிதாய் கேட்டதுக்கே
சிறைபட்டு போனேன்டி..!
உன் கருப்பட்டி கன்னத்தில
என் கவனம் இருக்குதடி..!
அதை கடிச்சு திங்கத்தான்
என் காதல் துடிக்குதடி..!
உன்னை நெருங்கி நானிருக்க
என் நெஞ்சம் நினைக்குதடி..!
வெறுப்பா நீ முறைத்தால்
நான் வெந்து சாகுவேன்டி..!
வெறுப்பா நீ முறைத்தால்
நான் வெந்து சாகுவேன்டி..!