சிறுவர் காதல் பாடல்
காகமோ
கருமேகமோ
கலக்குறாளே இவ..!
என்னமோ
என் யோகமோ
என்ன பாக்குறாளே இவ..!
சிணுங்கும் கண்ணசைவால்
சிறு வண்டா மாத்திட்டாளே..!
என் சிங்கில் ஸ்டேட்டஸ
சிறப்பாக அழிச்சுட்டாளே..!
பக்கத்துல உக்கார
பர்மிசன தந்துட்டாளே..!
வெக்கத்துல சிரிச்சே
உச்சத்த காட்டிட்டாளே..!
என் குச்சி ஐஸ்ஸு மூஞ்சி
இப்ப குல்பி ஐஸ்ஸா மாறுதே..!
குற்றால குரங்கு போல
குறும்பு செய்ய தோணுதே..!
கட்சி கொடி போலவே
காதலும் இப்ப பறக்குதே..!
கவர்மெண்டு பஸ்ஸாக
கவிதை கலேக்சன் கொட்டுதே ..!
இனி டவுசர போடுவனே
ஒரு டைவும் அடிப்பேனே
என் டார்லிங் பார்க்கவே
புது டான்ஸும் ஆடுவனே..!
இனி சைட்டும் அடிப்பேனே
இவ சைகைய ரசிப்பேனே
ஒரு சைரன் விசிலடித்து
என் சாங்க பாடுவனே..!
இவ வாசல் முன்னாடி நிக்கவே
இனி வாரம் தவறாம குளிப்பேனே..!
பேரன் கேன்ஸம் பூசியே
நான் பேரழகனா மாறுவேனே..!
டோரா புச்சி கார்டூன் போல
டேரா போட்டு சுத்துவனே..!
காலம் நேரம் வந்துச்சுனா
கல்யாணத்த முடிப்பேனே..!
காலம் நேரம் வந்துச்சுனா
கல்யாணத்த முடிப்பேனே..!!!