விண்ணில் மாசு
விண்ணில் பரவிடும் மாசு
குறைத்தால் உண்டு ஜீவ காற்று ,
வீணே இருந்தால் சூறையாடிவிடும்
அந்த விண்ணில் கலந்த மாசே
மண்ணில் மாந்தர் சுவாசக்காற்றை
காலம் கடந்த ரோகம் மனிதனுக்கு
வந்திடும் காலனாய் பின்னே ஆதலால்
விண்ணை மாசாக்காதீர் விளைவு தெரிந்தும்
துன்பத்தை விலைக்கு வாங்காதீர்