ஆசை காதல் முழுமையான அன்பு மட்டும் தான்

***காதலின் தேடலும் காதலியின் தேடலும் உண்மையான அன்பு ஒன்றுக்கு தான்...***

வண்ணத்துப்பூச்சியில் கூட உண்மையான காதல் இருக்கின்றது.
அதனால் தான்
பூவில் இருக்கும் தேனைத் திருடி தினமும் தன் கருவை வளர்க்கிறது......

காக்கைக்கு கூட காதலின் சுகமும் சோகமும் தெரியும் போல்
அதனால் என்னவோ
இன்பத்திலும், இறக்கும் தருணத்திலும் காதலின் முதலெழுத்தையே உச்சரிக்கின்றது...
**கா**கா**கா**கா** என்று...

எழுதியவர் : மு நாகராஜ் (25-Jan-18, 9:02 pm)
பார்வை : 547

மேலே