காதலர்கள் கவனத்திற்கு பகுதி 1
1 காதல்
ஓர் அட்சய பாத்திரம்
இதில் கவிதைகள் குறைவதேயில்லை…
2 எனக்காகத்தானே உன்னில்
படைக்கப்பட்டிருக்கிறது
ஏன் மறைக்கிறாய்
உன் உதட்டுச் சுழிப்பில்
எனக்கான புன்னகையை
3 சூரியன் விழிக்காத
ஓர் மார்கழிக் காலையில்
நீ கோலமிட்டுக் கொண்டிருந்ததையும்
கவனிக்க நேரமின்றி
ஏதோ ஒரு நேர்முகத்தேரர்விற்காக
அவசரத்தில் பறந்தபோது
அறியாது கோலத்தை மிதித்துவிட்டு
அசடுவழிந்து நின்றேன்.
அன்றிலிருந்துதான் நீ என்னை
தண்டித்துக் கொண்டிருக்கிறாய்
அன்றிலிருந்து கோபப் பாரர்வையிலும்
இன்று மட்டும் ஏனோ
என்னைப் பாரர்க்க மறுத்தும்
4 நீ கடல் அலைகளில்
கால் நனைக்கையில் எல்லாம்
ஓங்கியடிக்கிறது
ஓர் காதல் அலை எனக்குள்