என் மகனே
மகனே எனடா
என்னை தூர ஒதுக்கி வைத்ததேனோ
குழந்தையிலே நீ போட்ட சத்தத்தில் ஊர் கூடிடுமே
உன் அழுகையை நிறுத்த முடியாமல் நான் திணருவேன்
இன்று உன் தாயின் இழப்பு தாங்க முடியாமல் நான் அழுகையிலே "சும்மா கத்தாதே "என்றாய்
உன்னை தோளில் சுமந்து வளர்த்தேன் உமது சுமை தெரியவில்லை
இன்று ஒரு வாய் உணவுக்கு நான் உனக்கு சுமையாய் தெரிகின்றேனே
ஏன் மகனே
தள்ளாடும் வயதில் நடக்க முடியாமல்
திண்டாடும் நிலை கூட கவலையில்லை
என் பேரன் பேத்திகளை கண்டால் அவர்கள் நீ யாரென்று கேட்கும் நிலை கண்டால் நெஞ்சம் வெடிக்கின்றதே மகனே
என் உடலுக்கு கொல்லி வைக்க நீ வைப்பாய் என்று பல்லை கடித்துக்கொண்டேன்
என்னை தண்டச்சோறு என்றாயே
போதும் நான் எங்கு என் உயிர் பிரிந்தால் என்ன
என்னை தேடமாட்டாய் காணாமல் போனால் மகிழ்ச்சியடைவாய்
நான் செல்கிறேன்
உனக்கு துன்பமொன்று வருகையிலே என்னே நினைத்தாலே ஓடோடி வருவேனே என் மகனே.....