கூரார்வேல் மாறனென் கைப்பற்ற நல்வினை ஒன்றில்லேன் – முத்தொள்ளாயிரம் 64

நேரிசை வெண்பா

ஓராற்றால் எண்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறனென் கைப்பற்ற – வாரா
நனவென் றெழுந்திருந்தேன் நல்வினைஒன் றில்லேன்
கனவும் இழந்திருந்த வாறு. 64 முத்தொள்ளாயிரம்

பொருளுரை:

ஒருவகையாக தலைவனை எண்ணும் என் கண் இமைகள் இரண்டும் பொருந்தி உறங்க, அந்த நிலையில் கூர்மை நிறைந்த வேலையுடைய பாண்டியன் என் கைப்பற்றினான்;

இது நனவில் நடைபெறாது என்று உறக்கம் நீங்கி எழுந்தேன்; நல்ல ஊழ்வினை சிறிதும் இல்லாதவளாகிய நான் கனவினையும் இழந்த நெறிக்கு ஆளானேன்.

ஓராற்றால் – ஒரு வழியாக, ஒரு வகையாக, எண் – தலைவனை எண்ணும்,

இமைபொருந்த – கண்ணிமைகள் மூட, கூர்ஆர் வேல் – கூர்மை உடைய வேல்,

மாறன் – பாண்டியன், நல்வினை – நல்ல ஊழ்வினை, ஆறு – நெறி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-18, 8:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 71

சிறந்த கட்டுரைகள்

மேலே