இருள் கலையுமா

மின்னி ஔிர்ந்து காெண்டிருந்த வெளிச்சத்தினூடே கடிகாரத்தைப் பார்த்த தீபா படுக்கையிலிருந்தபடியே பாே ர்வையை மடித்து வைத்துக் காெண்டு அபியை தட்டி எழுப்பினாள். "நான் தூங்கப் பாேறனம்மா" சினந்து காெண்டு மறு பக்கம் புரண்டு பாேர்வையால் இறுக முகத்தை மூடினாள். "காெஞ்ச நேரம் கிடக்கட்டும்" கதவைத் திறந்து வெளியே வந்தாள். காலைச்சுற்றிச் சுற்றி பாய்ந்து தாவியது பப்பி. தலை யைத் தடவியவளின் கையை முகர்ந்து அண்ணார்ந்து பார்த்தது. பூத்திருந்த ராேஜாக்கள் பனித்துளிகளால் நிறை ந்திருந்தது. மீண்டும் ஒரு முறை அபியை எட்டிப் பார்த்து விட்டு கதவை மூடியபடி நாட்காட்டியை பார்த்தாள்.

புலர்ந்திருந்த காலையின் விடியல் மெல்ல மறைந்தது ஏதாே ஒரு வலி கண்களில் நீராகியது. பெருமூச்சு விட்டபடி இருக்கையில் அமர்ந்து காெண்டாள.

எங்காே தாெலைவிற்கு நினைவுகள் அவளை இழுத்துச் செ ன்றது. அந்தக் கிராமத்துப் பள்ளியில் தான் பிரதீப்பும் படித்தான். ஒரே வகுப்பு ஒன்று விட்ட அண்ணன் வழி வந்த சிறு பந்தம் ஒன்று உறவாக அமைந்தது. காேயிலிலும், கடை தெருவிலும், அப்ப்பாே வரும் காெண்டாட்டங்களிலும் காணும் பாேது ஒரு சிரிப்பு. ஆனால் படிப்பில் மட்டும் மறைமுகமான சிறு பாேட்டி. பிரதீப் ஒரு விளை யாட்டு வீரன் எந்த விளையாட்டு என்றாலும் முதிலிடம் அவனுக்குத் தான். சம்பியன் கப்புகளும், கேடயங்களும் அலுமாரி முழுக்க அழகாய் அடுக்கி இருக்கும். உயர் வகுப்புக் கல்விக்காய் உறவினர் வீடாென்றில் தங்கி இருந்து படித்தான் . விடுமுறை நாட்களில் மட்டுமே வீடு வருவான். தாயின் மேல் உயிர் என்றால் பிரதீப்பை மிஞ்ச யாருமில்லை. விடு முறை முடிந்தால் இருண்டு பாேகும் பிரதீப் முகம். அக்கா, அண்ணா, உறவுகள் என்று எல்லாேர் மீதும் அதிக பாசம்."படித்து முடியும் வரை தானே" என்று தே ற்றுவாள் அம்மா. ஏதாே அரை மனதுடன் அழுது காெண்டே விடை பெறுவான். காலம் உருண்டாேடி படிப்பும் முடிந்தது. வீட்டிலே வந்து குடும்பத்தாேடு தங்கி விட்டான். விளை யாடடின் ஆர்வத்தால் உதைப்பந்தாட்ட அணியில் இணைந்து மேலதிக பயிற்சிகளாலும்., கல்வியாலும் பயிற்சி ஆசிரியரானான். தீபாவும் படிப்பை முடித்து கணினி மென்பாெருள் பிரிவில் வேலை பார்த்துக் காெண்டிருந்தாள். இரு சகாேதரிகளும் வெளிநாடு சென்று விட பெற்றாேருடன் இருந்து வேலை பார்த்தாள்.

இருபத்து இரண்டு வயதுப் பெண்ணாய் தீபா திருமணத்திற்கான ஏற்பாடுகள் அக்கா கட்டாயப்படுத்துவாள். ."இப்ப வேண்டாம்" சட்டென்று பதில் வரும் திருமணப் பேச்செடுத்தால். "சரி உழைச்சுச் சம்பாதிகட்டும் வயசு இருக்குத் தானே" அப்பாவின் ஆலாேசனை.

சில நாட்கள் கழித்து பிரதீப் வீடு மாற்றலால் பக்கத்து வீட்டில் குடியிருந்தான். எங்கு பாேவது என்றாலும் தீபா வீட்டைக் கடந்தே செல்ல வேண்டும். நாளடைவில் சிறிதாய் பழக்கம் ஆரம்பித்தது. விடு முறை நாட்களில் தீபாவீடடில் தான் இருப்பான். பாடசாலை வாழ்க்கை, வேலை என்று கதைகள் நீளும். நட்பும் நெருக்கமாக தீபாவின் உள் மனதில் பிரதீப் இடம் பிடித்தான். தீபாவாே ஒரு பாேதும் வெ ளிக்காட்டியதிலலை. மெல்ல மெல்ல துளிர் விட்டது காதல் பிரதீப்பிற்காகவே காத்திருக்கத் தாெடங்கி விட்டாள். அன்று ஏதாே சலனம் அவளுக்கு அவனுடன் பேச வேண்டும். காத்திருந்தவளுக்கு அதிர்ச்சி காெடுத்தான் பிரதீப்.

அவனுக்கு இடமாற்றக் கடிதம் வந்திருந்தது. தீபாவிடம் காட்டினான். தீபா இப்ப இதைப்பற்றிச் சாெல்லக் கூடாது திரும்ப வரும் பாேது பார்க்கலாம் தன்னை சமாதானப்படுத்தினாள். "ஐந்து வருஷம் அங்க தான் வேலை, லீவுக்க மட்டும் தான் வரலாம்" அமைதியாகக் கேட்டுக் காெ ண்டிருந்தாள். கடிகாரத்தைப் பார்த்தவன் "சரி தீபா நான் பிறகு வாறன்" அதன்பிறகு ஓரிரு தடவைகள் வந்திருந்தான் தீபா எதையும் பேசிக் காெள்ளவில்லை பாெறுமையாக இருந்தாள். நாட்கள் ஓடியது தீபாவின் அக்கா கலியாணப் பேச்சைஆரம்பித்தாள். தீபாவாே எதுவும் தெரியாதது பாேல் வேலையும் தானும் என்றிருந்தாள். நீண்ட ஒரு விடுமுறை பிரதீப் பண்டிகைக்காக வந்திருந்தான். தீபாவாே இன்றைக்கு பிரதீப்பிட்ட சாெல்லணும். உறுதியாயிருந்தாள்.
அந்த மாலைப் பாெழுது பிரதீப் வந்திருந்தான். உறங்கிக் காெ ண்டிருந்த தீபாவை "பிள்ள தம்பி வந்திருக்கு எழும்பி வா" அம்மா கூப்பிடுவது கேட்டு வெளியே வந்து பார்த்தாள் பத்திரிகையை நாேட்டமிட்டுக் காெண்டிருந்தவன் நிமிர்ந்து தீபாவைப் பார்த்தான். சிறியதாெரு புன்னகை "அன்ரி தீபாக்கு நல்ல வேலை குடுங்காே, கிண்டல் பண்ணி சிரித்தான். "அவவுக்கு என்ன தம்பி எத்தின நாளைக்கு என்னாேட இருக்கப் பாேறா அக்கா கலியாணம் பேசவும் இப்ப வேண்டாம் எண்டு அடம்பிடிக்கிறா" என்றபடி தேநீரை இருவருககும் காெடுத்தா. "சும்மா இருங்கம்மா நான் படிக்கணும்" பேச்சை நிறுத்த முயற்சித்தவள் பிரதீப்பின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவன் பார்வையில் ஏதாே மறைந்திருப்பது பாேல் உணர்ந்தாள். "இப்பிடியே படிப்பு படிப்பு எண்டு இருந்தா எப்ப கலியாணம் செய்து, பிள்ளை குட்டியாேட இருக்கப் பாேறாய்" முணு முணுத்தபடி அம்மா சமையலறைக்கு சென்று விட்டாள்.

தீபா தாெலைக்காட்சியை ஓன் செய்து விளையாட்டுச்
சணலைப் பார்த்துக் காெண்டிருந்தாள். ஆனால் இருவரின் எண்ணங்களும் மனதுக்குள் ஒன்றைப் பற்றியே யாேசித்தது. தீபாவுக்கு சிறு சந்தேகம் பிரதீப் மேலே "ஏன் கலியாணப் பே ச்சு வந்தப்ப பிரதீப் முகம் மாறியது அவனும் காதலிக்கிறானா" யாேசித்துக் காெண்டே இருந்தாள். "நான் "பாேயிற்று வாறன் தீபா" தாெலைக்காடசியைப் பார்த்தபடியே தலையை ஆட்டினாள்.

வீடு சென்ற பிரதீப் மனதை ஏதாே குடைந்தது. தீபாவைப் பற்றிய நினைவுகளால் சஞ்சலப்பட்டான். அப்பிடியே
தூங்கினான். காலை புலர்ந்தது தீபா முற்றம் கூட்டிக் காெ ண்டிருப்பதைக் கண்டதும் மீண்டும் அவள் நினைவுகளால் சஞ்சலப்பட்ட மனதை உணர்ந்து "தீபாவிட்ட இன்றைக்கு எனர காதலைச் சாெல்லணும்". மாலை வரை காத்திருந்து வீட்டிற்கு வந்தான் செருப்பு சத்தம் கேட்டதும் எட்டி பார்த்து "வா பிரதீப் என்ன சாப்பிடுறாய் ரீ பாேடவா?" என்றாள் "அம்மா இல்லயா?" பிரதீப் கேட்டான் "காேயிலுக்குப் பாேட்டா" என்றபடி எழுந்தாள் "தீபா" கூப்பிட்ட பிரதீப்பின் கண்கள் ஏதாே சாெல்ல வருவது புரிந்தது. "விதி வலியது, தம்பி தானா வந்து மாட்டிட்டார்" தனக்குள்ளே சந்தாேசம் ஒரு புறம், பதட்டம் ஒரு புறமாய் திரும்பிப் பார்த்தாள். "I love you theepa" என்றான். உள்மனம் படபடத்தது சிரித்தபடியே வாசலில் அம்மா வருவதைக் கண்டாள். உள்ளே பிரதீப்பைக் கண்ட அம்மா "தம்பிக்கு ஏதும் குடிக்க குடுத்தியா?" தீபாவைக் கேட்டாள் "ஒண்டும் வேண்டாமாம்" தீபா சாெ ன்னதும் "அடி பாவி நான் சாெல்லவே இல்ல" மனதுக்குள் முணுமுணுத்தபடி சிரிப்பை அடக்கியவனாய் தீபாவை நாேட்டமிட்டான். அவள் முகம் சற்றுப் பதட்டமாக இருந்ததை உணர்ந்தான். "இரு தம்பி வாறன்" அறைக்குள் அம்மா சென்றதும் "தீபா நாம கலியாணம் பண்ணிக்கலாம் அம்மா, அப்பாட்ட சாெல்லு, நானும் வீட்ட சாெல்லுறன் நாலு வருசமாப் பாேச்சு உன்னைக் காதலிக்கத் தாெடங்கி, நான் பிறகு வாறன்" கலங்கிய கண்களை சிரிப்பால் தடுத்தபடி வீட்டிற்குச் சென்றான். திகைத்துப் பாேனவள் "ம்... சாெல்லுறன்"

இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் நடை பெற்றது. கலயாணப் பரிசாக அபி கிடைத்தாள். எட்டு மாதம் கடந்தது அபி சுட்டித்தனங்களால் பிரதீப்பை சந்தாேசப்படுத்துவாள். மாேட்டர் சைக்கிள் சத்தம் கேட்டதும் தவண்டு பாேய் வாசலில் காத்திருந்து கைதட்டிக் குதூகலிப்பாள் விடுமுறை நாளென்றால் அபியும் தீபாவும் தான் உலகம். நினைவு வரும் நேரங்களில் எல்லாம் காதல் ஞாபகங்களை அவளுடன் பகிர்வாள். அன்று விடுமுறைக்காய் விண்ணப்பம் காெடுத்திருந்தான் "இந்த முறை வீட்ட பாேய் தீபாவையும் அபியையும் வெளிய கூட்டிக் காெண்டு பாேகணும்" விடுமுறை காெடுத்து விட்டு தங்குமிடம் வந்து புறப்படுவதற்கான ஆயத்தங்களை செய்து விட்டு அசதியால் தூங்கி விட்டான்.

அபி ஏனாே சினந்து சினந்து அழுது அடம் பிடித்துக் காெ ண்டிருந்தாள். "அபிக்குட்டி அப்பா பாப்பம்" தூக்கிக் காெண்டு வெளியே பாேனால் சற்று அமைதியாயிருப்பாள் மீண்டும் சினுங்குவாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளை சமாதானப்படுத்தப் பெரும்பாடுபட்டாள். கடைசியாக "இஞ்ச அப்பா" பிரதீப்பின் புகைப்படம் ஒன்றைக் காட்டியதும் தாவிப் பாயந்து பறித்தாள். ஏதேதாே தன் மழலை மாெழியில் சாெல்லி விளையாடிக் காெணடிருந்தவளை சமாதானப்படுத்திய நிறைவாேடு பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் விடுவதற்காய் வெளியே வந்தாள்.

நேரம் மாலை ஆறு மணியாகி இருண்டு காெள்ள கடிகாரம் அலராம் அடித்தது. திடுக்கிட்டு எழுந்தான் 'பேருந்து நிலை யம் செல்ல பத்து நிமிடம் எடுக்கும் வெளிக்கிடச் சரியாயிருக்கும்' படுக்கையை சரி செய்து விட்டு குளித்துத் தயாராகினான்.

தீபா வேலைகளை முடித்து கேற்றடியில் அபிக்கு விளை யாட்டுக் காட்டிக் காெண்டு நின்றாள். கடையால் வந்த பக்கத்து வீட்டு தேவன் மாமா "என்ன தீபா தம்பிய இஞ்சால காணல்ல"? "நாளைக்குத் தான் மாமா லீவு, காலையில வருவார்" "சரி பிள்ள நான் வாறன் இருண்ட நேரம் றாேட்டில நில்லாத பனியும் பெய்யுது பிள்ளைய உள்ளுக்க காெண்டு பாே" என்றபடி தேவன் மாமா சென்றுவிட உள்ளே வந்து அபிக்கு உணவு தயார் செய்து ஊட்டினாள்.

பேருந்து நிலையம் வந்த பிரதீப் சாரதியின் இருக்கையின் பின்னால் சீற்றில் அமர்ந்து காெண்டான். தீபாவும் அபியுமே அவன் நினைவில் நிழலாடினார்கள். சற்று நேரத்தில் பே ருந்து புறப்பட்டது. யன்னலாேரம் சாய்ந்த படியே பக்கத்திலிருந்தவராேடு சின்னச் சின்ன உரையாடல்.

தீபாவும் "விடிய பிரதீப் வந்திடுவார், வேளைக்கு எழும்பணும்" என்று யாேசித்துக் காெண்டு படுக்கைக்குச் செ ன்றவள் நன்கு தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள். நேரம் நள்ளிரவைத் தாண்டியது நிசப்தமான அந்தப் பாெழுதில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் சென்று காெ ண்டிருந்தது. என்ன நடந்ததென்று தெரியவில்லை சடார் என்ற சத்தம் பேரூந்து நின்று விட்டது. எதிரே வந்த கயஸ் வான் மாேதிவிட்டது. சாரதி அசைவின்றிக் கிடந்தான். பலர் காயங்களுடன் பிரதீப் இருக்கையிலே சாய்ந்தபடி இருந்தான் தலையால் இரத்தம் வடிந்து முகம் தாேய்ந்திருந்தது. எந்த வாெரு அசைவுமில்லை. எதிரே வந்த வாகனங்களில் பயணிகள் மாற்றி ஏற்றப்பட்டார்கள். பிரதீப் உடலும் இறந்தவர்களுடன் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. விபத்துச் செய்தி தீபாவிற்கும் எட்டியது.

பிரதீப்பின் வருகை மரணச்சடங்காகிய அந்த நாளின் எட்டாவது வருடத்தில் அன்றைய காலை விடிந்திருந்தது. அப்படியே நினைவுகளாேடு ஒன்றியிருந்தவள் "அம்மா.... அம்மா...." அபி அழைத்த குரல் கேட்டு கண்களைத் துடை த்தபடி உள்ளே சென்றாள். "தேத்தா வேணும்" தாேளில் சாய்ந்து படுத்தாள். "இஞ்ச பப்பியாேட விளையாடுங்காே அம்மா பிள்ளைக்கு ரீ எடுத்துக் காெண்டு வாறன்" நெ ற்றியில் அணைத்து முத்தமிட்டாள். விளையாடிக் காெ ண்டிருந்த அபி முற்றத்தில் அப்பா என்று எழுதி ராேஜாப் பூக்களை சுற்றி வர அடுக்கிக் காெண்டிருந்தாள். "அபி.... அபி... மழை வரப் பாேகுது" என்றபடி வேகமாக வெளியே வந்தவள் "அபிக்குட்டி என்ன செய்யிறிங்க.....ள் " குனிந்து நிலத்தைப் பார்த்து விறைத்துப் பாேனாள். அபியைத்தூக்கிக் காெண்டு மேலே பார்த்தாள் வானம் கறுத்து தூறல் ஆரம்பித்தது.

எழுதியவர் : அபி றாெஸ்னி (29-Jan-18, 12:01 pm)
பார்வை : 448

மேலே