வாசமலரே என்னாச்சு
காலையில போனவ
காலமாச்சு திரும்பலியே
வாசல்தலை மிதிக்கலியே
வாசமலரே என்னாச்சு
கால்வயித்து கஞ்சிக்கு
கால்கடுக்க நின்னாலும்
காசுவாங்கி வீடுதிரும்பும்
வாசமலரே என்னாச்சு
ஒருமணி நேரத்துல
பத்துமைல் நடப்பாளே
மசங்குற நேரமாச்சு
வாசமலரே என்னாச்சு
பசியால நம்பிள்ளை
தேம்பித்தேம்பி அழுகிறான்
அழுகைகேட்டு ஓடிவரும்
வாசமலரே என்னாச்சு
இருட்டப்பாத்து பயந்து
இருண்டுபோய் கிடக்குறப்ப
மாமன்னு கூப்பிடும்
வாசமலரே என்னாச்சு
சீக்கிரமா வாடிபுள்ள
சீர்கெட்டுக் கிடக்குதுஊரு
வீடுவந்து சேந்துட்டா _ உன்ன
வேலைக்குன்னு அனுப்பமாட்டேன் !...