முதுமொழிக் காஞ்சி 12
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஈர முடைமை ஈகையி னறிப. 2
அறிவுப்பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
ஒருவன் நெஞ்சில் கருணையுடையவன் என்பதை அவன் துன்புறுவர்களுக்கு உணவும், பிறவும் கொடுத்து உதவும் முறையினால் அறிவர்.
பதவுரை:
ஈரம் உடைமை - ஒருவன் நெஞ்சில் கருணையுடையவன் என்பதை, ஈகையின் – துன்புறுவர்களுக்கு உணவும், பிறவும் கொடுத்து உதவும் முறையினால், அறிப - அறிவர்.
கருத்து:
ஒருவனிடத்துக் கருணை உண்டு என்பதற்கு அவனுடைய ஈகையே அறிகுறி.