இலக்கின் பயணத்துக்காக இழந்தவை

கை நிறைய
காசு வேண்டி
கண்டம் விட்டு
கண்டம் போனேன்.
இந்திய தேசம்
விட்டுவிட்டு
இடம் பெயர்ந்தேன்
இலக்கைத் தேடி.

நாயர் கடை
தேநீர் விருந்து
நண்பர்களோடு
கூட இருந்து
ஓடிப் பிடித்து
ஆடின ஆட்டம்
ஒன்றும் இங்கில்லை
இது பணத்திற்கான ஓட்டம்.

சொகுசான
வாழ்க்கை கிடக்க
சொந்த பந்தம்
என்னை மறக்க
எப்படியோ
வாழ்ந்து வந்தேன்
என்னை நானே
மறந்திருந்தேன்.

வளர்ச்சி இங்கே
பெருகிப் போனது.
என் வயதும் பெருகி
முதுமையானது.
இலக்கின் பயணமோ
முழுமையானது.
இன்பம் ஏனோ
தொலைந்து போனது.

பணத்தால் பாசம்
இழந்து போனேன்.
பதவியை இழந்த
தலைவன் ஆனேன்.
என்னை நானே
இழந்து போனேன்.
ஏனிந்த வாழ்வென்று
நொந்து போனேன்.

இழந்ததை நினைத்து
இதயம் வலிக்கிறது.
இப்போது தான்
வாழ்க்கை புரிகிறது.
வாழ்ந்திங்கே இருக்கலாம்
வயிற்றுப் பிழைப்புக்காக.
வாழ்க்கையை தொலைத்தேனே
இலக்கின் பயணத்துக்காக.....

எழுதியவர் : தங்க பாண்டியன் (31-Jan-18, 5:59 pm)
பார்வை : 131

மேலே