என்றும் நீ வேண்டும்
எனக்காக நீ வேண்டும்..
உனக்காக நான் வேண்டும்..
நீ நான் என்பது நாமாக வேண்டும்..
உன் கால் கொலுசின் ஒலி கேட்டு.. நான் தினம் துயில் எழ வேண்டும்..
உன் இதயத்துடிப்பே என் இசையாக வேண்டும்..
உன் சிரிப்புகள் என் கவலைகளை போக்கும் மருந்தாக வேண்டும்..
உன் கண்கள் என் கண்ணாடியாக வேண்டும்..
உன் இசை என்னும் உலகிற்கு..
நான் பாடல்வரிகளாக வேண்டும்..
சிறுசிறு சண்டைகள் போட்டு..
பின் வரும் உன் சமாதானம் வேண்டும்...
சின்ன சின்ன தவறுகள் செய்து உன்னிடம் அடி வாங்க வேண்டும்..
கொட்டும் மழையில்..
ஒற்றைக் குடையுடன் உன் கைகோர்த்து நடைபோட வேண்டும்...
உன் மடியே என் தலையனை ஆக வேண்டும்...
உன் நிழல் என நான் வேண்டும்...
என் தோள்கள் உன்னை தாங்கும் துணையாக வேண்டும்...
நீ என் கூந்தலை வருடும் சுகம் வேண்டும்...
நீ என் உயிராக வேண்டும்..... என் உணர்வுகளாய் வேண்டும்...
நீ என்னுடன் இல்லாத பொழுதும்...
உன் நினைவுகளை மட்டும் சுமந்து துடிக்கும் இதயம் வேண்டும்..
உன் கண்களில் இருந்து கண்ணீர் வரும் மறுநிமிடம்...
நான் இறந்திருக்க வேண்டும்....
சாகும் போதும்....
உன் மடியில் சாய்ந்து....
உன் முகம் பார்த்து சாக வேண்டும்.....