அம்மா

குருக்குலம் கண்டதில்லை
குருபார்வை வேண்டியதில்லை
மடிபொழுதில் நீ ஊட்டிய அமிர்தமே
மண்புகுந்தும் என்னை விட்டுப் போனதில்லை

மரபு என்ன என் வாழ்வு செழிக்க
செழித்ததே எந்தன்முகம்
அம்மா என்றழைத்தவுடன்
பூர்வஜென்ம புண்ணியம்
பிறப்பெடுத்தேன் உன்மடியில்

வேதங்கள் போதாது
உன் புகழ் பாட
யுகங்கள் கூடாது
உன் தியாகம் மறக்க

மறதி வேண்டாம் என்றென்றும்
மறவாமல் உன்னை போற்ற
காலமெல்லாம் உன்திருவடியில்
சமர்ப்பிப்பேன் என் பாசக்கடனை அம்மா...

எழுதியவர் : ப.இளவரசன் (2-Feb-18, 7:39 am)
Tanglish : amma
பார்வை : 870

மேலே