தாயுமானவன்

என்ன செய்வான் இவன்
பசியால் அழுகிறானா?
அம்மாவைத் தேடுகிறானா?
எதுவுமே இல்லையே
கண்களில் ஏக்கத்தாேடு
தேடுகிறான் எதையாே
அவனது அணைப்பைத் தவிர
ஆற்றுவதற்கு ஏதுமில்லை
யார் செய்த பாவம்
தளிர்கள் இரண்டு தவிக்கிறது
துளிர்க்கும் வயதிலே ஒரு
பாலகனைச் சுமக்கும்
தாயுமாகி விட்டான்