என்னருகில் நீ
வானம் கூட தொட்டுவிடும் தூரம்தான்! உன் விரல் என்னைத் தொட்டிருக்கும் வரை;
சூறாவளி கூட சுகம்தான்,
உன் மூச்சுக் காற்று என மேல்
பட்டிருக்கும் வரை:
புயல்மழையடித்தாலும் புன்னகை வந்திடுமே,
உன் ஆனந்தக் கண்ணீர்
என் தோள் வழியும் வரை;
நெருப்பு கூட பனியாகுமே,
உன் தகிப்பு என் மேல் படர்ந்திருக்கும் வரை:
பூகம்பம் கூட ஆனந்தமே,
நீ என்னை நிலமாய் தாங்கும் வரை;
நீ என்னருகே என்றால்,
மாமலையும் கடுகாகுமே;
நீ என் தொலைவென்றால்,
குவிக் கை நீரும் கடலாகுமே;