நிழல் வசந்தம்

மழலைக் கனவுகளை
--நிஜங்கள் தீமூட்ட
--மௌன மயானமொன்று
--மனதில் எரிகிறது ; - இப் பிஞ்சு
விழிநீர் ததும்ப
--வெறித்த பார்வையில்
--விரியும் காட்சிகளில் - ஒரு
--வாழ்க்கை தெரிகிறது;
நிழலுக்கும் வர்ணம்
--நம்பிக்கை விரல்தீட்ட
--விழிகாணா தூரத்தில்
--வசந்தம் வருகிறது; -அது
மொழியில்லா தேசத்தில்
--மேல்கீழ் வர்க்கப்
--பிழையில்லா நேசத்தில்
--பொய்யெனவே மலர்கிறது

மௌன மயானமொன்று
மனதில் எரிகிறது

எழுதியவர் : கவித்தாசபாபதி (2-Feb-18, 7:32 pm)
பார்வை : 127

மேலே