இயற்கையின் காதலி
மழையின் மீது கோபம் கொண்டேன்
எதற்காகவோ???
என் அருகே ஒரு ஜோடி புறா
மழைக்கு ஒதுங்கி
மரக்கிளையில் அமர்ந்தது
காதலை சேர்த்து வைப்பதுதானோ மழையின் வேலை
என ஏக்கம் கொண்டேன்
என்னிடம் ஜோடி இல்லாததால்
என் கண்களின் துளிகளை மறைக்க
சட்டென வீழ்ந்தது மழைத்துளி
சற்றே ஆறுதலாக நிமிர்ந்தேன்
மழையின் மேல் காதல் கொண்டேன்
மீண்டும் உணர்ந்தேன் மழை காதலை என்றும் இணைக்கும் என்று..............................
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
