றெக்க கட்டி பறப்பேன்
பொண்ணப் பாத்தேன்
பொன்னாட்டம் ஜொலியா
ஜொலி ஜொலிச்சா
கண்ணப் பாத்தேன் அது
தென்னம் பாளையில்
சொட்டும் கள்ளாட்டம்
உள்ள உள்ள உள்ளத்தை
காட்டவே இல்ல நானதை
பாக்கவுமில்ல ஒதட்டுல துளி
சிரிப்பே இல்ல மொகத்தில
எவ்வித கெளிப்பும் இல்ல
அப்புரம்தான் தெரிஞ்சது அது
பொண்ணே இல்ல சலவை
கல்லால செஞ்ச செலையின்னு
அதை கல்லால கண்டதுக்கே
இத்தனை பெரிய ஆர்பாட்டம் நெஜத்தில இப்படி அதுவே ஒரு பொண்ணுன்னா காலு ரெண்டும்
தரையில பாவாது ஆகாயத்தில
றெக்க கட்டி பறப்பேன் உயிருக்கு
உயிராய் அவளை பாவிப்பேன்
என்னோட அந்தஸ்துக்கு அப்படி
ஓருத்தி எனக்கு கெடைப்பாளா
என்பது கொஞ்சம் சந்தேகமே
எல்லாம் ஆண்டவன் செயலென
மனச தேத்திக்கிட்டேன் இழுத்து
போத்திக்கட்டேன் போர்வையை
கனவால கெடைச்ச உணவால
வயிற்றுப் பசி அடங்கிவிடுமா
இதுக்கு மேல உறக்கம் வருமா
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி