மரபணு மாற்று விதை
விஷம் தோய்க்கப்பட்ட விதைகளால்
நிலத்தின் கற்புகள் நிர்மூலமாக்கபட்டு,
வெற்று சதை பின்னடங்களை விலை பேசி கொண்டிருக்கின்றனர்..
புற அழகை புடம் போட்டு
மாயையை விற்று மன கண்ணை அலங்காரமாக்கி
கழிவை உட்கொள்கிறான்.
கலோரி அளவு சரியாக இருக்கிறது என்று ..
நாட்டு விதைகள் எல்லாம் வழக்கொழிந்த பின்னே
நாமும் வழக்கொழிந்து கிடப்போம்
மருத்துவமனை வராண்டாவில்...
மரபணு மாற்று விதைகளால்..