வாழை/பெண்
பிஞ்சாய் நானிறுக்கயில்
வெட்டிக்கொள்ளுவாய்
சாமிக்கு படயலென...
என் பாதி வெட்டி
படயல் பரப்பி
நக்கித்தின்னுவாய்
நானமேதுமின்றி...
நான் பூக்கயில்
தொட்டு பண்பாய்
தடவுவாய், பூத்தபின்பதையும்
விற்ப்பனை செய்வாய்...
கரம் பிடித்து
குலைதள்ளி நான்நிற்க்க
வெறிகொண்டு வெட்டிச்சாய்த்திடுவாய்
சலனமேதுமின்றி...
கீறிப்பிளப்பாய், உள்தண்டுறிப்பாய்,
அதையும் மிச்சமின்றி உண்பாய்...
நார் நாராய் பிறித்து
பூத்தொடுப்பாய்,
இன்னுமென்ன எதிர்பார்க்கிறாய் என்னிடம்,
வெட்டிய இடத்தில் சானுயரம் முளைத்த குட்டிகளுக்கு பதில் சொல்...
#கலாம்தாசன்