மாற்றம் வேண்டி
உழவுக்கு நீர் கொடுக்க
யவரும் இல்லை
இருந்தும் விளைநிலம் கண்ட
விளைச்சலுக்கு விலை
சொல்ல விளைத்தவனுக்கு கூட
வலுவும் வாயியும் இல்லை....!
வாங்கிய பட்டங்கள் தானுயர
வேலை வாங்கித்
தரும் எண்ணமெல்லாம் மாறிப்
போயி காகிதப்
பட்டம் செய்துயர பறக்கவிடாலமெனும்
எண்ணமே உயரெழுகிறது...!
வேலையிலா திண்டாட்டம் அனைவர்
வயிற்றிலும் பசியெனும்
தாளம் போட வைக்கிறதே....!
இலவசம் இலவசம் என்று
கொடுத்து கொடுத்து
நமைக் கெடுத்து விட்டனர்
நம் விற்ற ஓட்டுடெல்லாம்
நமை ஓட்டாண்டியாக்கியது....!
இனியாவது மாற்ற வேண்டி
மாற்றி ஓட்டிலாம்
வாக்கு விற்பனைக்கு அல்ல
என நிரூபிக்கலாம்....!