சூரிய ஒளி

ஏ.சி அறையில் தூசி படாது
வாழ்வு நகர்த்தும் மனிதா;
வாசி ஏழுடைய தேர் கொண்ட
சூரியனின் கதிர் படாது போனால்
நோய் பல வந்து அவதியுற்று
காசிக் கரையில் நீச உடல்
கரைப்பாய் மானிடா!
நடு வானச் சூரியன் சுட்டெரிக்கும்🔥
ஆனால், கதிரவனின் காலைக்
கதிர்கள் நம் உடல் நோய் தடுத்தெரிக்கும்! சூர்ய நமஸ்காரம் சுகம் தரும்👍

எழுதியவர் : பாலமுருகன் பாபு (4-Feb-18, 10:22 pm)
பார்வை : 460

மேலே