காதல்

காதல், வீணையைப்போல்
தந்திகளை சேர்த்து மீட்டி
நாதம் கேட்டு சுருதி சேர்த்து
மீட்டிட தேவகானம் தரும் வீணை,
தந்திகள் அறுந்துவிட்டால்
சேர்த்திட முடியாது, நாதம்
தராது வீணை; காதலில்
சந்தேகம் வந்துவிட்டால்
அது வீணைக்கு அறுந்த
தந்திபோல் ; தந்தியை
ஒட்டி சேர்த்திட முடியாது
காதலும் அப்படித்தான்

காதல் ஒரு முத்து மணிமாலை
ஊடலும், சந்தேகங்களும்
அழகு மாலையதை அறுத்துவிடும்
பின்னர் கோர்க்கவா, சேர்க்கவா
என்றாகிவிடும், அறுந்த காதல் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Feb-18, 9:18 am)
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே