ஒற்றை காதல்

இதோ...
காலமெல்லாம் காதல் மொழி பேச
இன்னுமோர் பந்தம் ! இனியவன் (அவன்) உன்னுயிர் சொந்தம் !

தென்றல் தேடும் தேனிலவுதனை தனக்கேயென தனக்குள் மறைக்கும் வான்முகில் தனைப்போல,
வண்ணமயில் (என்னை) உனக்குள்ளே ஒளித்துகொள் !

எத்தனை காலம் உன் வரவை எண்ணி!!..

நீ வருவேன் என்று திரும்பி பார்த்தால் நான் உன்னால் திணறிய காலங்கள் மற்றும் மிஞ்சியதே!

ஏக்கம் என்ற ஒன்றை உன்னால் மட்டுமே எனக்கு புரிய முடிந்தது ஆனால் அதுவே என் மனதில் ஆக்காமாகியதே! உன்னை மறவ முடியாமல்

காட்டரோசை போல காதில் வந்து முணுமுனுத்து போனாயடி என்னைவிட்டு காணாமல் செல்வதற்கா!!

உறங்கும் கண்கள் உன்னை காணாமல் உறங்க மறுக்கிறது அதை உதாசின படுத்தி உதறி விட்டாயடி..

இந்த உலகம் எல்லோருக்கும் உட்பட்டது ஆனால் என் உலகமே நீயானதால் தானே என் உறுவவுமும் இன்று பிம்பமாகிறது

விளையாடிய நாட்களை விட உன்னை விடாமல் நினைத்த நாட்களும் என் நெஞ்சில் நஞ்சாய் உமிழ்கிறதே

ஒருபுறம் கண்ணில் நீர் தாரைகள் ஓடுகிறது மறுபுறம் நெஞ்சங்கள் குமிறுகிறது உம்மை பிரிவதை தொடர்ந்து

பாவமடி பெண்ணே நான் அல்ல உன்னை காதல் செய்த அந்த இதயம் பாவம்.

துரோகமடி கண்ணே எனக்கல்ல... வாழ்க்கையில் இன்னொரு கண்கள் என்று எதிர்பார்த்த அந்தந்த கண்களுக்கு செய்த துரோகம்.

காலங்கள் சென்றாலும் இன்னும் காயங்கள் ஆறவில்லையடி..

ஊர் கூடி உன் உத்தமனை ஒன்று சேர்க்க திட்டம் வகுத்த கேட்ட அடுத்த நொடி என் கண்கள் கேட்க்க மறுத்து விட்டது கண்ணீரை கட்டுபடுத்த!

அன்பே! நல்வாழ்வு பெறு நானிலமும் போற்ற வாழ்ந்துவிடு

விடைபெறுகிறேன் ஒற்றை காதலை கண்ணியபடுத்துகிறேன்.

இதயத்திற்க்கு ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை ஏன் என்றால் அந்த இதயமும் இங்கு இல்லாத காரணத்தினால்

மாலை சூடும் மணப்பெண்ணே வாழ்த்துக்கள்

வதிலை M. ஜாபர் சாதிக்

எழுதியவர் : வதிலை ஜாபர் சாதிக் (5-Feb-18, 10:19 am)
Tanglish : otrai kaadhal
பார்வை : 139

மேலே