காதல் தகிப்பு
உன்மேல் என் பார்வை பட்டது ♥
உன் தேகம் தீயாய் சுட்டது♥
வியர்வை தேனாக சொட்டுது ♥
உன் பார்வைகாமன்கணைவிட்டது♥
என் மூச்சுக்காற்ற உனைத் தொட்டது♥
உன் தேகம் ஒருவிதமாய் வெட்டுது♥
சுற்றம் நினைத்து ஆசை அணை கட்டுது♥
மன்மதன் இம்சை தேளாய் கொட்டுது♥
விடியும் வரை என்னுயிர் உன்னில்
விதை நட்டது♥
விடிய வைத்த சூரியனை மனம் திட்டுது♥
விடியா இரவு படைக்க திட்டம் தீட்டுது♥
விடிந்ததும் வேலை நாடும் பிரிவு வாட்டுது♥
எப்பொருள் காணினும் உன் முகமே காட்டுது♥
அது கண்டதும் என் திறமையின் வலிமை கூட்டுது♥
காதலின் வலிமை இதுதான் என
காலம் பறைசாற்றுது♥🌿