முட்டாள்தனம்

கற்பதை கற்காமல் காலத்தில் வீழ்வதை கற்கும் முட்டாள் நாம்
ஏற்பதை நிராகரிக்காமல் ஆட்சியில் சொல்வதை ஏற்கும் முட்டாள் நாம்

அஞ்சுவதில் அஞ்சாமல் வீரனென நடிக்கும் நாம் முட்டாள் தான்
வீரத்தை உடலிலும், அழகை உருவத்திலும் பார்க்கும் நாம் முட்டாள் தான்

தன்னை காக்க பிறர் உண்டு,
பிறர் காக்க நாம் உண்டு என்ற
என்னத்தில் ஆரம்பம் இந்த முட்டாள்தனம்
ஈன்ற பிறகு காக்கும் என்றும்,
இறந்த பிறகு சொர்க்கம் என்றும்
நினைப்பதில் ஆரம்பம் இந்த முட்டாள்தனம்

வட்டம் உலகம் மட்டுமல்ல, உன் வாழ்க்கையும் தான் என்று சொல்லாத போதனையால், சில போதைகளை நோக்கி, பேதைகளாய் வாழும் நாம் அனைவரும் முட்டாள்கள் தான்...

எழுதியவர் : அர்ஜூன் (5-Feb-18, 11:16 pm)
பார்வை : 96

மேலே