இறைவனிடத்தில் ஓர் இறைஞ்சல்
சின்னப் பருவம் முதல்
சிகப்பு உண்டியலை
எந்தன் குழந்தை என
நான் ஏந்தித் திரிந்த பிள்ளை,
பத்து வயதினிலே
பள்ளித் தோழியுடன் நான் ஆடியதும்
கூடி விளையாடியதும்
கண்ணே கண் மணியே
கற்பகமே பட்டே செல்வமே
செண்பகமே ஏன் அழுதாய் கண்ணுறங்கு
என்று கைபொம்மையோடு கழித்ததுவும்
பாவைப் பிள்ளையொன்றை வீதியில் கண்டு
வாங்கி கேட்ததுவும் அம்மா எனைத் திட்டியதும்
அதனை வாங்கி என் பிள்ளை இதுவென்று ஏந்தி நான் தாலாட்டியதும்
பொம்மைக் குழந்தையைச்
சீராட்டி பட்டுடுத்தி அலங்காரம் செய்ததுவும்
இன்னும் என் மனதில் இடைவிடாது ஓடும்
அழியாத ஞ்சாபகங்கள்
கணவன் வந்ததுவும் கையில் தவழும் பிள்ளை என்பார்
காலம் கடந்ததம்மா கண்கள் குளம் ஆகுதம்மா'
என் பிள்ளை வேண்டுமென்று பேராசைப்பட்ட மனம்
பேதலித்து நிற்குதம்மா அன்னை வரமிழந்து அநாதரவாய் நிற்குதம்மா
பிள்ளை வரம் கேட்டு உன் பாதம் தொழுகின்றேன்
என் ஆசை தீர்த்து வாய்ப்பாய் பேரிறைவா
அஸ்லா அலி