ஏழைப்பங்காளன்
பாரபட்சம் பாராது
பாவிமகன் உழைத்தானே
பிறர்பசி போக்க
பிறைநிலவாகத் தேய்ந்தவனே
உயிர்காக்க எண்ணி
உழைப்பிற்குள் புதைந்தவனே
நாட்களை கணக்கிட்டு
நாற்றுநடவிட்டு விதைத்தவனே
பொன்னிருந்தும் பொருளிருந்தும்
பொருட்படுத்தாத செல்வேந்தனே
உயிருள்ளவரை உழைப்பேனென்று
உறுதிமொழி எடுத்தவனே
பாரதத்தைத் தாங்கும்
பாரதத் தாய்க்கிணையானவனே
பசியென்னும் வார்த்தையை
பரலோகம் அனுப்பியவனே
கோவணம் கட்டிய
கோடீஸ்வரன் நீதானே
நிலமெல்லாம் உன்பாதச்சுவடு
நில்லாமல்போனது எங்சகள்சாபக்கேடு !...