இறப்புக்கு ஏங்குகிறான்

சிறப்புக்கு விடைதந்து
......சிறுமைக்குப் பலியாகி
வெறுப்புக்கு ஆளான
.....வேதனையைத் தாளாமல்
இறப்புக்கு ஏங்குகிறான்
.....இவ்வுலகில் தன்வாழ்வுப்
பொறுப்புக்கு முடிவிட்டுப்
.....போவதற்கு வாடுகிறான்


தன்னுயிராய் நினைத்தவள்
......தயக்கங்கள் இல்லாமல்
இன்னொருவன் கைப்பிடிக்க
......இதயமது நொறுங்கியவன்
இன்னுயிரை நீக்கென்றே
......இறப்புக்குப் பொறுப்பாகும்
மன்னவனின் சன்னதியில்
.....மன்றாடி வாடுகிறான்



நேற்றுவரை, ஒருநொடியும்
......நிறுத்தாமல் சுவாசிக்கும்
காற்றென்றே நினைவினிலே
.....கலந்திருந்த காதலியைத்
தோற்றுவிட்ட நிலைகண்டு
.....துவண்டுவிட்ட நெஞ்சினனாய்
கூற்றுவனை வாவென்றுக்
......கூப்பிட்டே வாடுகிறான்

எழுதியவர் : kokilamakan (7-Feb-18, 10:25 pm)
பார்வை : 211

மேலே