காதல் எனும் தொடர்கதை

காதல் முடியும் இடம்
தேடி தேடி
ஆரம்பித்த இடத்திலே
நிற்கிறோம் இன்று வரை

அதே பார்வை
அதே சிரிப்பு
அதே வெட்கம்
அதே கோபம்

வருடங்கள் கடந்தாலும்
அதே மழலை தன்மையுடன்
எங்கள் காதல்

அன்போடு தொடங்கும்
அன்றாட பொழுதின்
சங்கமத்தில் எல்லாம்
முற்று புள்ளியுடன்
உறங்கி எழுந்ததும்

கதையை முடிக்க
கனத்த மனமின்றி
பக்கத்தில் புள்ளிகள்
சேர்த்து சேர்த்து

தொடர்கதையாய்
தொடரும் வாழ்க்கை பயணம்

ஆம்
அன்பான மனைவி
அமைய பெற்ற
அனைவரின் வாழ்வும்

அழகான காதல் தொடர்கதையேதான்

எழுதியவர் : ந.சத்யா (7-Feb-18, 10:28 pm)
பார்வை : 112

மேலே