முதுமொழிக் காஞ்சி 22
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மீப்பி லோரை மீக்குணம் பழியார். 2
- பழியாப்பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
மேன்மைக் குணம் இல்லாரை மேன்மை செய்யாமையை யாவரும் பழியார்.
பதவுரை: மீப்பு இலோசை - மேன்மைக்குணம் இல்லாதவரது,
மீக்குணம் - மேன்மையானவற்றைச் செய்யும் இயல்பில்லாமையை,
பழியார் - எவரும்பழித்துரையார்.
கீழ்மக்களிடம் மேலோர்க்குரிய குணமும் செய்கையும் இல்லாமையை எவரும் பழித்துரையார்.
மீக்குணம் என்பதை மீச்செலவு என்பதுபோல வரம்பு கடந்த செய்கையைச் செய்யும் இயல்பு எனக்கொள்வது பொருந்தும்.