வெள்ளிக்கிழமை

வெள்ளிக் கிழமையில்
வெளியெங்கும் தைமாதப்பனித்துளி
கதவைத் திறந்தால்
கமழுதடி உன்குளியல்துளி

சொட்டுச்சொட்டாய் நீர்வடித்து
சொக்கவைக்கத் திட்டமோ
கலைந்த கூந்தலால்
கவர்ந்திழுக்க எண்ணமோ

சோப்பின் வாசம்
சோம்பலை விரட்டியதேனோ
மஞ்சள் பூசியமுகம்
மனதை இழுப்பதேனோ

விழிமூடும் நேரத்தில்
வியப்பூட்டி இரசிக்கிறாள்
இரக்கமற்ற திருடி
இரவுதூக்கம் கெடுக்கிறாள் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (9-Feb-18, 2:21 pm)
பார்வை : 331

மேலே