தோழன்

குற்றம் பார்க்காதிருந்தால் தான் சுற்றம்
உன் அருகிலிருக்கும்,
அன்பை காட்டி வருமானம் ஈட்டி தந்தால் தான் உன் துணை உறவிலிருக்கும்,
சத்தான மருந்து கொடுத்து, சரியான
கவனம் வைத்தால்தான் உன் சேயும்
கருவிலிருக்கும்,
அடிபணிந்து நடக்காது போனால் மேலாளரின் பரிவு பிரிவிலிருக்கும்,
ஆனால், நீ சுகப் பட்டால் ஆனந்த கண்ணீரும், துக்கப் பட்டால் ரத்த க்கண்ணீரும் உன் தோள் சொரிவது
பெற்ற தாயும்"உற்ற நண்பனும் மட்டுமே🌷

எழுதியவர் : பாலமுருகன் பாபு (10-Feb-18, 5:48 am)
Tanglish : thozhan
பார்வை : 418

மேலே