நண்பன்-நட்பு

நண்பன் அவன் விதி வசத்தால்
தீயோர் பிடியில் சிக்கி தன் வயம் இழந்து
தீய செயல்களில் ஈடுபடுகிறான் -அதைக் கண்டு
துணையாய் நிழல்போல் அவனை பின்தொடரும்
அவன் உயர் நண்பன் , அத்தீயவர் பிடியிலிருந்து
அவனை, முதலைப் பிடியில் சிக்கியவனை
உயிருடன் மீட்டது போல , தன் உயிரையே
பணயமாய் வைத்து காப்பாற்றுகிறான்-என்னே
இவன் வியந்தரும் செயல்! 'நட்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்' என்று கூறிடலாமா இந்நட்பை .

எழுதியவர் : vasavan-தமிழ்பித்தன்-வாசுதேவன (10-Feb-18, 9:32 am)
பார்வை : 581

மேலே