நெஞ்சம் மறப்பதில்லை

நீ என்னுடன் இருக்கிறாய் என்ற நினைவுகளை நம்புவதா?
கண்ணெட்டாத் தாெலைவில் நீ இருக்கும் நிஜத்தை நம்புவதா?
நினைவுகளின் ஆட்சிக்குள் நிஜங்கள் தாேற்றுப் பாேனது,
அடிக்கடி சாேதனை செய்கிறேன்
சத்தமின்றிப் பாேன கைப்பேசியை
நினைனவுகளைச் சுமந்து நிற்கும்
சந்திப்பிடங்களில் தனிமையை உணர்கின்றேன்
சாலைகளில் நீள நடக்கிறேன் தூரம் கடந்தும்
இருண்ட மேகம் பாெழியும் நீர்த்துளிகளில்
கண்ணீராேடு நனைகிறேன்
காத்திருப்பின் எல்லைகள் நிரந்தரமாகி விட்டாலும்
நெஞசம் மறப்பதில்லை என் காதலை..

எழுதியவர் : அபி றாெஸ்னி (12-Feb-18, 10:00 am)
பார்வை : 269

மேலே