தமிழன் நாடாளும் நாள் கருத்துக்கள்

ஆதி முதல் அந்தம் வரை தமிழ் மொழியனில்
உயர் கருத்துக்கள் எண்ணிலடங்கா பல இருக்க
அது வழியே தமிழர்கள் ஒன்று கூடி ஆயந்திட்டு
வாழ்கை பயணம் செய்ய வேண்டும்

இந்த உலகத்தில் சுமார் மூன்று ஆயரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருந்திருக்கின்றன என்கிறது கிறிஸ்தவர்களின் வாழ்கை முறைகளை போதிக்கின்ற பைபிள். இந்த உலகத்தில் நான்காயிரத்துக்கும்
மேற்பட்ட மொழிகள் இருந்திருக்கின்றன என்கின்றது தமிழர்களின் வாழ்க்கை முறைகளை எடுத்தியம்புகின்ற தமிழ் இலக்கிய வரலாறு.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனி மொழி இருந்தாலும் அந்த மொழி இலக்கிய கருத்துக்களை உலகமெங்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டுமெனில் ஓர் பொது மொழி அவசியம் தேவை என்பதனை கருத்தில் கொண்டு பண்டைய காலத்தின் தமிழ் சான்றோர்களும், ஆன்றோர்களும், மொழியாளர்களும், இலக்கிய வித்தகர்களும், இலக்கிய ஆர்வலர்களும், உலகப் பொது மொழியாக ஆங்கிலத்தை ஏற்று கொண்டு ஆதரித்தனர். அவ்வகையில் ஆங்கிலம் ஒன்றே பன்னாட்டு பொது மொழியாக திகழ்ந்து வரும் மொழியாகும். இம் மொழியே உலகமெங்கும் வாழ்ந்து வரும் மக்களுக்கு பிற மொழியை எடுத்துச் சென்று விளக்குகின்ற ஓர் சாதனம் போன்று விளங்கி வருகின்றது. இந்த உண்மையை தமிழர்களாகிய நாம் அனைவரும் உணர்ந்து ஒப்புக்கொண்டு ஒன்றாக வேண்டும். இக்கருத்தின் அடிப்படையிலே மக்களாட்சியின் மகத்தான தலைவராக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் "இரு மொழிக்கொள்கைகயை" வலியுறுத்தினார். தமிழர்களாகிய நாம் நமது தாய் மொழியான தமிழையும், பொது மொழியாகிய ஆங்கிலத்தையும் ஆட்சி மொழியாக கொண்டிட வேண்டும் என அறிவுறுத்தினார். அவ்வழியிலே தான் இன்றும் தமிழ்நாட்டு அரசு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்று இந்தியா நாட்டிலும், பன்னாடுகளிலும் ஆங்கிலத்தின் பங்கீடு எந்த அளவிற்கு முகந்து இருக்கிறது என்பதனை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தியா நாடு பல்வேறு மாநிலங்களை கொண்ட நாடு, இங்கு பல்வேறு மொழிகளை மக்கள் பேசி வருகின்றனர். எனினும், பொது மொழியாக இந்தி மொழியை ஆட்சி மொழியாக கொண்டு திகழ்ந்து வருகின்றது. அதே வேளையில், ஆங்கிலத்தை இரண்டாவதாக ஆட்சி மொழியாக கொண்டு அரசு முறைகளையும், அரசு இயல்களையும் இயக்கி வருகின்றது. பல வேற்றுமைகள் கொண்ட இந்தியாவை ஒற்றுமையுடன் பொது மொழியாகிய ஆங்கிலத்தை கொண்டு ஆட்சி செய்யலாம் என்று இதுநாள் வரையிலும் இந்தியாவை ஆட்சி செய்து வருகின்றனர். இந்த செயல்பாட்டை பல மொழிகள் பேசும் ஒவ்வொரு மாநிலமும் ஏற்று அதன் வழியிலேயே மத்திய அரசாங்கத்தை ஆதரித்து வருகின்றனர்.

மேற்கொண்ட கொள்கையின் அடிப்படையில்தான் இந்தியா சுதந்திர நாட்டின் முதல் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் "வேற்றுமையில் ஒற்றுமை " என்ற கோட்பாட்டை இந்தியாவிற்கு எடுத்தியம்பி அவ்வழியிலேயே ஆட்சியும் செய்து சென்று இருக்கிறார் என்பதனை இந்தியர் அனைவரும் அறிவோம். அக்காலங்களில், இந்தியாவில் இருக்கும் பிறமொழி பேசுபவர்கள் இந்தியை அவசியமாகவும், கட்டாயமாகவும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை. தேவைப்படுபவர்களும், விருப்பமுள்ளவர்களும் கற்றுக் கொள்ளலாம் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தான் இன்று இந்தி மொழி பல்வேறு மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியுடன் இரண்டாம் மொழியாகவும், மூன்றாம் மொழியாகவும் பள்ளிக்கல்விகளில் வலியுறுத்தப்பட்டு வருகின்றதனை பார்க்கிறோம். அவ்வகையில், தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் தமிழையும், ஆங்கிலத்தையும் இரு கண்கள் போன்று பாவித்து தமிழ் மாணவ, மாணவிகளின் கல்விக்கொள்கையில் இவை இரண்டை மட்டுமே வலியுறுத்தி வந்தனர். ஏனேனில், அதிகமான மொழிக்கொள்கையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உட்புகுத்தினால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் குழப்பங்கள் ஏற்படும் என்றும், எனவே, அதிகமான மொழிகள் தமிழர்களுக்கு தேவையில்லாதது என்றும், தமிழ்மொழி சிறந்தது என்றும், தமிழர்களின் தாய் மொழியான தமிழை மறவாமலும், மங்காமலும், அழியாமலும் பாதுகாப்பாய் நிலைத்திருக்க செய்தனர்.

இத்தகைய "மொழி பாதுகாப்பு ஏற்பாடு " தமிழ் நாட்டிற்கு தேவையானது தான் என்றாலும், பண்டைய
கால புலவர்களும், கவிஞர்களும், பொதுவுடைமை கருத்துக் கொள்கைகளை எடுத்தியம்பி வலியுறுத்தி உள்ளதை தமிழர்களாகிய நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். குறிப்பாக கணியன் பூங்குன்றன் என்னும் சங்ககால புலவர் தனது பாடலில்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்

நன்றும் தீதும் பிறர் தர வாரா"

என்றும், தற்கால கவிஞர் சுப்ரமணிய பாரதியார் என்பவர் தனது கவிதைப்பாடலில்,

"திரைகடலோடியும் திரவியம் தேடுங்கள் "

"எட்டுத்திக்கும் சென்றிடுவீர் !"

"கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !"

"பன்னாட்டு சாத்திரங்கள் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தல் வேண்டும்"

"எல்லாரும் இந்நாட்டு மன்னர்"

மேலும், இயந்திரமயமாக்கப்பட்ட நவீன காலங்களில் திரைப்படத்துறையின் கலை இலக்கியங்கள், பண்பாடுகள், ஆகியவைகள் பலவகை ஊடகங்களின் வாயிலாக மரபை மீறிய செயல்களாக எடுத்தியம்பி வருகின்ற நிகழ்வுகளை தமிழர்களாகிய நாம் அன்றாடம் அறிந்து வருகிறோம். மேற்கொண்ட இக்கருத்துக்களை கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே பல தமிழ் அறிஞர்களும், புலவர்களும், கவிஞர்களும் பிறமொழிகளையும் நேசிக்க வேண்டும். அவ்வண்ணமே தமிழ் மொழியையும் உலகமெங்கும் கொண்டு சேர்த்தல் வேண்டும் என்று தங்களது கவிதைகளின் வாயிலாக புரட்சியை செய்து இருக்கின்றார்கள் என்பதனை அறிகிறோம்.

எனவே, இன்றைய விஞ்ஞான முன்னேற்ற களங்களில் எத்தனையே வழிகளில் தமிழை பாதுகாத்து அதன் வழியில் மக்களிடை பறைசாற்றினாலும், பிற மொழி ஆதிக்கச்செயல்பாடுகளை தடை செய்து தவிர்த்துவிட முடியாது. ஏனனில், மக்களாட்சி நாட்டில் இருக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் அணைத்து மொழிகளுக்கும், சுதந்திரமும், பாதுகாப்பும் அளிக்கிறது என்பதனை நாம் அனைவரும் அறிதல் வேண்டும். மேலும், கற்றல் குறித்து, சுப்ரமணிய பாரதியார் அவர்கள் தனது கவிதையில்,

"மந்திரம் கற்போம் வினைத்
தந்திரம் கற்போம்" என்றும்

"வானை அளப்போம்
கடல் மீனை அளப்போம் " என்றும்

கற்றலும், அறிதலும், வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்திற்கு அவசியம் தேவை என்றுரைக்கிறார். அவர் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்திட வலியுறுத்தியதால் புரட்சி கவி என்று போற்றப்படலானார்.

இத்தகைய மாற்றங்களைத்தான் "பேரறிஞர் அண்ணா " அவர்களும் கீழ்காணும் வகையில் வலியுறுத்தினார்.

"காலம் மாறக்கூடியது
மாறிக்கொண்டதேன் இருக்கும்
காலத்திற்கு ஏற்ப
கருத்தில் மாற்றம் வேண்டும்
அவ்வாறு மாறாத சமுதாயம்
மறைந்துவிடும்" என்றார் .

இத்தகைய அடிப்படையில் பல்வேறு வழிகளில் தமிழகத்தில் மக்களிடையேயும், தமிழ்மொழியிடையேயும், கலை, கலாச்சாரம், பண்பாடு இவைகளிடையேயும், அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், கல்வி, அறிவியல் போன்ற தமிழகத்தின் அணைத்து துறைகளிலும் மாற்றத்தினை ஏற்படுத்தியதால் காலம் சென்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆர் அவர்கள் "புரட்சி தலைவர்" என்னும் பெயரினை பெற்றார். எனவே, மாற்றம் என்பது மக்களின் வாழ்விலும், நாட்டினிலும், உலகத்தனிலும் இயற்கையாக நிகழ்ந்து கொண்டு இருப்பதால் அதுபோன்று மக்களும் மாற்றத்திற்கு விதிவிலக்கல்ல. எனவே, நாம் பிறரையும், பிறர் மொழியும் நேசிக்க வேண்டும். அவ்வகையில் இந்திய நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியான இந்தியை நாம் ஏற்றுகொண்டிட வேண்டும். அப்பொழுது
தமிழன் "நாடாளும் நாள் தானே வரும் " இக்கருத்தினை அடிப்டையாகக் கொண்டு சுவாமி விவேகானந்தர் அவர்கள் தமிழ்நாட்டை பற்றி கூறிய செய்திகளில் குறிப்பாக சென்னை பற்றி கூறிய செய்திகளில் எதிர்காலத்தில் சென்னை இருந்து இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதற்கு தமிழர்கள் ஒன்றும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனது நூல்களை படித்தாலே போதும் என்று கூறியிருக்கிறார் . அதில் பொதிந்துள்ள அர்த்தம் என்னவென்றால், தேவ நாகரிக மற்றும் வேத நாகரிக மொழியான சமஸ்கிருதத்தை படியுங்கள் என்பதாகும். அத வேளையில் இந்தி மொழியையும் கற்றுத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதாகும். பின்னர் தமிழ்நாடு மக்களுக்கு மற்றவை எல்லாம் தான கிடைக்கும் என்றார். ஆனால் இப்பணிகளில் தமிழர்கள் வெற்றி பெற்றார்களா? என்றால் பகுதி வெற்றிகளையும், பகுதி தோல்விகளையும் கொண்டவர்களாக அவர் அமெரிக்காவில் உலக மத சபையில் ஆற்றிய உரையின் இடையனில் கூறிய கிணற்று தவளையை போன்று தாண்டியும் தாண்டாதவர்களாவா இருந்து வருகின்றனர் . என்றைக்கு தமிழர்கள் மொழிக்கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வாடா மாநில பகுதியில் இருந்து வந்த மொழிகளை ஏற்று தமிழ் மொழியுடன் சேர்ந்து பின்பற்றுகின்றனரா அன்று தமிழன் நாடாளும் நாள் வரும். ஆங்கில மொழியானது பல ஆயிரம் மயில்களுக்கு அப்பால் தோன்றிய மொழியாகும். அம்மொழி இந்தியாவை கடந்த நூற்றாண்டுகளில் ஆண்டு சென்ற ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டு சென்றது. இன்றளவும் அம்மொழியை கற்று பயன்படுத்தி வருகிறோம். இன்று இந்தியா கல்வி முறையில் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே போதிக்கப்படுகிறது. மேலும் புத்தகங்களும் ஆங்கில மொழியினிலே அச்சடிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது. எனவே வெகு தொலை தூரத்தில் தோன்றிய ஆங்கில மொழியை தமிழர்களாகிய நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் பொழுது ஏன் நமது மாநிலங்கள் பக்கத்தில் தோன்றிய இந்தி மொழியையும் சமஸ்க்ருதத்தையும் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்ற கேள்வியை மக்கள் முன்பு கேட்க கடமைப்பட்டுள்ளோம். எனினும் இந்தியாவை பேரறிஞர் அண்ணா அவர்கள் வலியுறுத்திய இருமொழி கொள்கைகளில் ஒரு மொழி கொள்கையான ஆங்கில மொழியை கொண்டும் தமிழன் நாடாளலாம். அக்காலமும் அந்நாளும் தமிழர்களது கைகளில்தான் அடங்கியிருக்கிறது.
இதனையே "நன்றும் தீதும் பிறர் தர வாரா" என்று அக்கால தமிழர் நமக்கு நயம்பட விளக்கம் அளித்து உணர்த்தியுள்ளார்.
தமிழர்களின் வரலாறுகளை நன்கு ஆய்ந்தறிந்து பார்த்தோமேயானால் அவர்கள் தமிழகத்தை மட்டும் ஆளவில்லை. பல நாடுகளை ஆண்டு இருக்கின்றார்கள். காடுகளை ஆண்டு இருக்கிறார்கள். உலகத்தை ஆண்டு இருக்கிறார்கள் என்பதனை நன்கு அறிந்து கொள்ள முடியும்.

மேலும் எண்ணற்ற பாடல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றினில் தமிழன் நாட்டை ஆள்வது குறித்தும் உலகை ஆள்வது குறித்தும் எடுத்து இயம்பி இருப்பதனை கண்டறிந்து ஆய்ந்து அகத்தில் செலுத்தி அதன்படி தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும் இந்தியா தேசத்திற்கும் பெருமையை தேடிக்கொடுப்பேர்களாக . தமிழன் நாடாளும் நாள் வெகு தூரத்தில் இல்லை, அது மிகவும் அருகில்தான் இருக்கிறது.
'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு'

எழுதியவர் : ஆக்கம் சௌந்தர்ராஜன் எம் ஏ (12-Feb-18, 6:34 pm)
பார்வை : 120

மேலே